பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான 16 வகையான ஊட்டசத்து தாவரங்கள் என்ன

பயிர்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும். பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள் பேரூட்டச்சத்துக்கள் எனப்படும். பயிர் வளர்ச்சிக்கு குறைவாக தேவைப்படும் சத்துக்கள் நுண்ணூட்டச்சத்துக்கள் எனப்படும்.



தாவரம் - தாவரத்தில் உள்ள சத்துக்கள், பயன்கள்:

ஆவாரம் இலை 

சத்து : மணிச்சத்து

பயன் : மணி பிடிக்க உதவும்

முருங்கை இலை, கருவேப்பிலையில்

சத்து : இரும்புச்சத்து உள்ளது 

பயன் : பூக்கள் நிறைய பிடிக்கும்

எருக்கம் இலை 



சத்து : போரான் சத்து உள்ளது- 

பயன் : ¬ காய், பூ, அதிகம் பிடிக்கும் 

காய், கோணலாகமல் இருக்கும்

புளியந்தலை 

சத்து : துத்தநாக சத்து 

பயன் : செடியில் உள்ள இலைகள் சிறியதாக இல்லாமல் ஒரே சீராக இருக்கும். 

பயிரின் வளர்ச்சி அதிகரிக்கும்

செம்பருத்தி, அவரை இலை



சத்து : தாமிர சத்து, 

பயன் : தண்டுப்பகுதி மெலிந்து காணப்படாது

கொளுஞ்சி, தக்கபூண்டு 

சத்து : தழைச்சத்து

பயன் : பயிர் செழித்து காணப்படும்

துத்தி இலை

சத்து : சுண்ணாம்புச் சத்து( கால்சியம் கார்பனேட்) 

பயன் : சத்துக்களை பயிரின் பாகங்களுக்கு பிரித்துக் கொடுக்கும்.

எள்ளுசெடி 

சத்து : கந்தகம்( சல்பர்) 

பயன் : செடி வளர்ச்சி அதிகரிக்கும்-

தண்டு மெலிந்து இருக்காது மஞ்சள் கலராக மாறாது

வெண்டை இலை 

சத்து : அயோடின்(சோடியம்) 

பயன் : மகரந்தம் அதிகரிக்கும்

மூங்கில் இலை 

சத்து : சிலிக்கா

பயன் : பயிர் நேராக இருக்கும்

பசலைக்கீலை 

சத்து : மெக்னீசியம் 

பயன் : இலை ஓரம் சிவப்பாக மாறாது

அனைத்து பூக்களிலும்

சத்து : மாலிப்டினம் 

பயன் : பூக்கள் உதிராது

நொச்சி : பூச்சிகளை விரட்டும்

வேம்பு : புழுக்கள் வராமல் பாதுகாக்கும்

பேரூட்டச்சத்துக்கள்:

தழைச்சத்து, மணிச்சத்து,. சாம்பல்சத்து, சுண்ணாம்புச்சத்து, கந்தகசத்து, மெக்னீசியம்சத்து முதலியன அதிகளவில் தேவைப்படும் எனவே இவை பேரூட்டச்சத்துக்கள் எனப்படும்.

நுண்ணூட்டச்சத்து:

இரும்புச்சத்து, துத்தநாக சத்து, மாங்கனீசு சத்து, மாலிப்டின சத்து. தாமிர சத்து, போரான் சத்து, பயிர்களுக்கு குறைந்த அளவே தேவைப்படுவதால் இவை நுண்ணூட்டச்சத்து எனப்படும்.

குளோரின் சத்து, சோடியம் சத்து, அலுமிசியம் சத்து, சிலிகான்சத்து. பயிர் வளர்ச்சிக்கு மிக மிகச் குறைந்த அளவே தேவைப்படும் இவை பயிர் விளைவிக்கும் சத்துக்கள் எனப்படும்

No comments:

Post a Comment

Reply soon